மின்சாரத்துறை மறுசீரமைப்பு அறிக்கை நாமலுக்கு

112 0

நாட்டின் மின்சாரத்துறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மறுசீரமைப்புக்களை முன்வைக்க அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை குறித்த தேசிய கொள்கைகள் பற்றிய உபகுழுவின் முன்மொழிவுகளை எதிர்வரும் டிசம்பர் 08ஆம் திகதி தேசிய பேரவையில் முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாக குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த அறிக்கைக்கு நேற்று (28) அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன், இது தொடர்பில் தேசிய கொள்கை குறித்த உபகுழுவின் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறித்த அறிக்கையை நேற்று (29) நாமல் ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

நாளாந்தம் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய இயலாமையினால் ஏற்படும் மின்வெட்டு மற்றும் அதிகளவிலான மின் கட்டண அதிகரிப்பு உட்பட இலங்கையில் மின்சாரத்துறை எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உள்ளடக்கிய பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையை ஆராய்ந்து பார்த்து அது தொடர்பில் தனது முன்மொழிவுகளை தேசிய பேரவையில் முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.