மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் இலத்திரனியல் சாட்சிகளை வெளிப்படுத்தல் தொடர்பான இணையக் குற்றங்கள் பற்றிய சமவாயத்திற்கான இரண்டாவது மேலதிக நெறிமுறை வரைபில் கையொப்பமிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
‘புடாபெஸ்ட் இணைய குற்றங்கள் தொடர்பான சமவாயம்’ என அழைக்கப்படும் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் இலத்திரனியல் சாட்சிகளை வெளிப்படுத்தல் தொடர்பான இணையக் குற்றங்கள் பற்றிய சமவாயத்தின் பங்காள நாடாக இலங்கை கையொப்பமிட்டுள்ளதுடன், குறித்த சமவாயம் 2015.09.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறையிலுள்ளது.
அதன் இரண்டாவது மேலதிக நெறிமுறை வரைபில் கையொப்பமிடும் நிகழ்வு இன்று புதன்கிழமை ஸ்ரார்ஸ்பேர்க் நகரில் இடம்பெறவுள்ளது.
குறித்த நெறிமுறை வரைபில் கையொப்பமிடுவதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.