ஊட்டச்சத்து இன்மையால் இலங்கை உலகில் ஐந்தாவது இடத்தையும் பிராந்தியத்தில் இரண்டாவது இடத்தையும் அடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஏழை மக்கள் ஒருவேளை அல்லது இரண்டு வேளை உணவையே உட்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், இந்த போசாக்குக் குறைபாட்டிலிருந்து எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.