குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் 3 ஆவது செயலாளரான, பணி இடைநிறுத்தப்பட்ட இ. குஷான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளராகப் பணியாற்றிய நிலையில் பணி இடைநிறுத்தப்பட்ட ஈ. குஷான் இன்று (29) அதிகாலை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.