மட்டு. புதூரில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் 20 போத்தல் கசிப்புடன் கைது

147 0

மட்டக்களப்பு  தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள  புதூர் பிரதேசத்தில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை  20 போத்தல் கசிப்புடன் நேற்று (28) மாலை  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை மாலை கசிப்பு வியாபாரம் இடம்பெறும் குறிப்பிட்ட வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ததுடன் 20 போத்தல் கசிப்பை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.