வைத்தியரின் பரிந்துரை இன்றி மருந்தை உட்கொண்ட பெண் உயிரிழந்தார்!

294 0

வைத்தியரின் பரிந்துரைகள் எதுவும் இன்றி  மருந்தகத்திலிருந்து தொண்டைச் சளிக்கான மருந்தை பெற்று உட்கொண்ட பெண் ஒருவர் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிக்கட்டு பகுதியைச் சேர்ந்த மலிதி குமாரி என்ற 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தொண்டை வலி காரணமாக அதற்கான மருந்தை  மருந்தகம் ஒன்றில்  பெற்றுள்ளார்.

குறித்த மருந்தை உட்கொண்ட அவரது உடல்நிலை மோசமடைந்து, அம்பியூலன்ஸ் மூலம் களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

களுபோவில வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த  பெண் மறுநாள் உயிரிழந்துள்ளார்.

இறந்த பெண்ணின்  உயிரிழப்பு திறந்த தீர்ப்பாக அறிவிக்கப்பட்ட நிலையில்   சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு  கொழும்பு மாவட்ட மரண விசாரணை அதிகாரி எஸ்.கே.பி.ஜானக கொடிகார உத்தரவிட்டுள்ளார்.