இந்தியாவை சேர்ந்த மாணவரொருவர் கனடாவில் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடா – ரொறன்ரோ நகரில் அமைந்திருக்கும் தனியார் கல்லூரியில் அரியானா மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் சைனி என்ற 20 வயது மாணவர் கல்வி பயின்று வந்துள்ளார்.
குறித்த மாணவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மிதிவண்டியில் சென்ற போது லொறியொன்றில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அரியானா மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கனடா சென்றதாகவும், கார்த்திக்கின் உடல் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.