சுற்றிவளைக்கப்பட்ட Facebook களியாட்டம்

135 0

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகநூல் களியாட்டம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு போதைப்பொருள்கள் மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த 08 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (27) அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 மற்றும் 30 வயதுக்கு இடைப்பட்ட வெலிகம, ரணல, திஸ்ஸமஹாராமய, கனங்கே, தெலிஜ்ஜவில, வன்சாவல மற்றும் பெலியத்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நேற்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.