அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் நீல் பிரகாஸ் அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்படவுள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்படும் அவர் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வார் ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெல்பேர்னை சேர்ந்த 30 வயதான அவர் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்காக செயற்பட்டவேளை கைதுசெய்யப்பட்டு துருக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது குடிவரவு குடியகல்வு தடுப்பிற்கு மாற்றப்பட்டுள்ளார்,அவரை மீண்டும் நாட்டிற்கு கொண்டுவர அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
எனினும் எப்போது அவரை அவுஸ்திரேலிய அரசாங்கம் கொண்டுவரதீர்மானித்துள்ளது என தகவல்கள் வெளியாகவில்லை.
2018 இல் நீல் பிரகாஸ் பிஜியை சேர்ந்தவர் ஐஎஸ் அமைப்பில் இணைந்து செயற்பட்டவர் என்ற அடிப்படையில் அவரது பிரஜாவுரிமையை முன்னைய அரசாங்கம் இரத்து செய்திருந்தது.
எனினும்மெல்பேர்னை சேர்ந்த தந்தைக்கு பிறந்த நீல் பிரகாஸ் தங்கள் நாட்டின் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை என பிஜி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.