காணாமல் போனோர் தொடர்பில் ஐ.நா. செயலருக்கு மகஜர்

357 0

காணாமல் போனோர் குறித்த உண்மைத் தன்மையை வெளிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அனுப்பிவைப்பதற்கான மகஜர், கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் அமைந்துள்ள ஐக்கியநாடுகள் உலக உணவுத்திட்ட அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், காணாமல் போனோரின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில், இன்று முற்பகல் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

தமது பிள்ளைகளின் உண்மை நிலையை கண்டறியும்வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.