இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கும் போது வலியுறுத்த வேண்டிய விடயங்கள் குறித்து தமிழ் தேசியக் கட்சிகள் தீர்மானங்களை எடுத்துள்ளன.
இதற்கமைய, தமிழ் தேசியக் கட்சிளுக்கிடையில் கொழும்பில் நேற்று (25) மாலை சந்திப்பு இடம்பெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூடிய இந்தக் கூட்டத்தின் போது, நில அபகரிப்பு நிறுத்தப்பட்டு அபகரிக்கப்பட்ட நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், அதிகார பகிர்வு சம்பந்தமான அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை அமுல்படுத்தி மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட்ட வேண்டும், உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த வடகிழக்கு பிரதேசத்தில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப்பகிர்வுடனான புது அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.