வீடுகளுக்கு புதிய மின் இணைப்புகளை வழங்க போதுமான உபகரணங்கள் இல்லை – தயாசிறி

148 0

கிராமப்புறங்களில் புதிய மின் இணைப்புகளை வழங்குவதற்கு மின்சாரசபையில் போதுமான உபகரணங்கள் இல்லாமல் இருக்கின்றன.

அதனால் புதிய மின் இணைப்புகளை வழங்குவதில் பாரிய தாமதம் ஏற்பட்டு வருகின்றது. இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வுகாண வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மின்சாரசபையை மறுசீரமைக்கு அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளபோதும் அதுதொடர்பான நடவடிக்கை மந்தகதியிலேயே  இடம்பெற்று வருகின்றது.

மின் விநியோகத்தை மேற்கொள்ள பல யோசனைகள் வந்துள்ளன. இந்த யோசனைகள் தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்தால் பாரிய செலவுகளை தவிர்துக்கொள்ள முடியும்.

அதேபோன்று கிராமிய பகுதிகளில் வீடுகளுக்கு புதிய மின் இணைப்புக்களை வழங்குவதற்கு தேவையான உபகரணங்கள் இல்லை. குறைந்தபட்சம் மின்மானிகூட இல்லை.

ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு மின்மானியை மாற்றுவதற்கு ஒருமாதகாலம் வரை செல்கின்றது. மின்சாரசபையில் வேலை செய்வதற்கு பணியாட்கள் இருக்கின்றபோதும் வேலை செய்ய தேவையான உபகரணங்கள் இல்லை.

டொலர் பிரச்சினையால் மின்சார உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கலாம். என்றாலும் இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வுகாணப்படவேண்டும்.

ஏனெனில் கிராமப்புரங்களில் பல தொழிற்சாலைகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள. என்றாலும் அந்த தொழிற்சாலைகளுக்கு மின்சார இணைப்பு இல்லாமல் பல மாதங்களாக ஆரம்பிக்க முடியாமல் இருக்கின்றன. இதுபாரிய பிரச்சினை.

இதனால் முதலீட்டாளர்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மின் உபகரணங்கள் புதிதாக கொள்வனவு செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்தி இருப்பதாகவே எமக்கு தெரியவருகின்றது. அதனால் கிராமிய புறங்களில் மின் இணைப்புகளை மேற்கொள்வதற்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் மின்சாரசபையின் சில அதிகாரிகளின் நடவடிக்கையபல் இயற்கை திரவ வாயு கேள்விக்கோரளை மின்சாரசபை 2018இல் இருந்து மதிப்பீடு செய்தது.

தற்போது நிறைவடையும் நிலைக்கு வந்திருக்கின்றது. ஏன் இவ்வாறு செயற்படுகின்றால்கள் என்றால், எதிர்வரும் ஜனவரிக்கு பின்னர் மழை வீழ்ச்சி கிடைப்பதில்லை.

இவ்வாறான நிலையை பயன்படுத்திக்கொண்டு அவசர மின் சக்தியை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருக்கின்றது. 350 மெகாவொட் மின்சாரத்தை அவசர கொளவனவாக பெற்றுக்கொள்ள திறைசேரியிடம் நிதி கோரி இருக்கின்றது.

ஜனவரிக்கு பின்னர் நாட்டில் மழை வீழ்ச்சி கடைப்பதில்லை என்றால், அதற்கு முகம்கொடுக்க முடியுமானவகையில் வலுசக்தியை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இந்த நடவடிக்கையையே  வழமையாக மின்சாரசபையில் மேற்கொள்ளப்படுகின்றது.

அதனால் இவ்வாறான நடவடிக்கைகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். மின்சாரசபையில் இருக்கும் ஒருசில அதிகாரிகளே இந்த நடவடிக்கையுடன் சம்பந்தப்படுகின்றனர். நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.