சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
13 வயது சிறுமி ஒருவர் தனது பாதுகாப்பில் இருந்தபோது கடத்தப்பட்டதாக தாயொருவர் இங்கினியாகல பொலிஸில் செய்த முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபரை பொலிஸார் தேடி வருவதாக பொலிஸார் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் சிறுமியை அழைத்துக் கொண்டு பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
752496657V இலக்க தேசிய அடையாள அட்டையை கொண்ட சுமித் குணவர்தன என்ற நபர் 47 வயதுடைய தம்பகல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டுள்ள சுமித் குணவர்தன என்ற சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 071 859 11 50/ 063 224 20 22 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மேலும் கோரப்பட்டுள்ளது.