இலங்கை மனித உரிமைகள் அமைப்பினால்மேற்கொள்ளப்பட்டுவரும் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை முடிவுகள் இரு வாரங்களுக்குள் உறவினர்களுக்கு அறிவிக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் வடமாகாண பணிப்பாளர் பேராசிரியர் ஆர். சாந்தன்,தெரிவித்துள்ளார்.
காணாமற் போனவர்களைக் கண்டறிவதற்கான முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் செயலமர்வு இலங்கை மனித உரிமைகள் அமைப்பினால், நேற்றைய தினம் யாழ்.சாவகச்சேரி மீசாலை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் இன்று இடம்பெற்றது. இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் பேராசிரியர் ஜயந்த களுபோவில தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் காணாமற் போனவர்களின் உறவினர்கள் 50 பேர் தங்கள் முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
யாழ் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்களிலும் காணமல் போனவர்கள் தொடர்பான விபரங்களை கேட்டறிந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட காணமல் போனவர்கள் தொடர்பான அமர்வு கொடிகாமத்தில் நடைபெற்து.
எமது அமைப்பின் மகளிர் விவகார பொறுப்பாளரால் அனைத்து பிரதேச செயலகங்களிலும் விண்ணப்பம் கோரப்பட்டு பின்னர் அவை பரிசீலிக்கப்பட்டு அந்த விபரங்கள் தலைமை காரியாலயத்துக்கு அனுப்பப்படும். அந்த வகையில் அங்கிருந்து அறிவிக்கப்படும் பகுதிகளில் குறித்த அமர்வை நடாத்துவோம் தென்மராட்சியில் 50 பேருடைய வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளோம்.
குறித்த பதிவுகளின் தொகுப்புகள் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்ததுக்கு கையளிக்கப்படும். அங்கிருந்து காங்கேசன்துறையில் உள்ள சிரேஸ்ட பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டு இவர்கள் தொடர்பான அறிக்கை அனுப்பிவைக்கப்படும். அவர்கள் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணை முடிவுகள் இரு வாரங்களுக்குள் குறித்த உறவினர்களுக்கு அறிவிக்கப்படும்.
அனைத்து மக்களுக்கும் இவ்வாறு விரைவாக முடிவுகளை அறிவிக் முடியாவிட்டாலும் இயன்றளவு முடிவுகளை அறிவிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அத்துடன் காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருக்கிறோம். அத்துடன் இங்கு இடம்பெற்று வரும் கொலை, களவு தொடர்பாகவும் உரியவர்களுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளோம். இது பயனுடைய காரியமாக தொடர்சியாக நிடைபெவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.