புகையிரத சேவைகள் திணைக்களம் புதிய புகையிரத நேரசூசி அட்டவணையை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
2006ஆம் ஆண்டின் பின்னர் மாற்றப்பட்டுள்ள நேரத்திற்கு அமைய இந்த நேரசூரி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், புகையிரத பயணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையினாலும், புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டமையினாலும் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் புகையிரத சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தற்சமயம் நாளாந்தம் 396 ரயில்சேவைகளும் 25 ரயில் பஸ் சேவைகளும் இடம்பெறுகின்றன. நேற்று முதல் இது அமுலுக்கு வந்துள்ளது என்று புகையிரத பொது முகாமையாளர் பி.ஏ.பி.ஆரியரட்ன தெரிவித்தார்.
புதிய புகையிரத நேரசூசி அட்டவணையைப் புகையிரத சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.railway.gov.lk/ இல் பார்வையிடமுடியும்