வவுனியாவில் உள்ள தனியார் நெல் களஞ்சியசாலையில் இருந்து பொலனறுவைக்கு நெல் மூடையினை ஏற்றி சென்ற லொறி ஒன்று 24 ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாவனைக்கு உதவாத வகையில் இருந்த 16,000 கிலோகிராம் எடையையுடைய நெல் ஏற்றிச்சென்ற லொறியொன்றே இவ்வாறு கைதுப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
ஈரற்பெரியகுளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே சரக்குகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் லொறியின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நெல் இருப்பு, லொறி மற்றும் நெல் இருப்புக்களை ஏற்றி சென்ற நபரும் இன்று (25) வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.