நுவரெலியா, குடாகம பிரதேச மக்கள் இரண்டாவது நாளாக நேற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நுவரெலியா ஹட்டன் டிக்கோயா நகர சபையினால் சேர்க்கப்படும் குப்பைகள் குடாகம பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குடாகம பிரதேச மக்கள் நேற்று காலை வீதியை மறித்து இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக, ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிப்போக்குவரத்து சுமார் அரை மணித்தியாலத்துக்கு மேல் பாதிப்புக்குள்ளாகின.
அதனைத்தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த ஹட்டன் பொலிஸார், பிரச்சினையை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாகவும், அந்த அதிகாரிகளின் நடவடிக்கையின் பின் இப்பிரச்சினை தீர்க்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
அதன் காரணமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனங்களை செல்ல அனுமதித்தனர்.