யாழ்ப்பாண தமிழ் சங்கமும் வடமராட்சி வடஇந்து மகளிர் கல்லூரியும் இணைந்து தமிழ் மொழித்தின விழாவை நேற்று நடாத்தியுள்ளது.
தமிழ் மொழித்தின நிகழ்வு நேற்று வடஇந்து மகளிர் கல்லூரியில் யாழ்ப்பாண தமிழ் சங்கத்தலைவர் பேராசிரியர் மனொன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது.
தமிழ் மொழித்தின நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு யாழ்ப்பாணம் கரிகணன் அச்சகத்தினரால் திருவள்ளுவர் சிலைகள் வழங்கி வைக்கப்பட்டன.