திசைகள் வெளிக்கும்!
எழுவான் திசைநோக்கி
எழுமெங்கள் கரங்கள்…
தெளிவாய்த் தெரியுமெம்
வரலாற்றைப் படைக்க
இருளையும் தடைகளையும்
தாண்டியே வெளிக்கும்
தமிழீழத் திசைகள்!
விதைக்கப்பட்ட எமது
மாவீர்களின் பூமி
இனவிடுதலையின்
நியாயச் சாட்சிகளை
யுகங்கள் கடந்தும்
நிலைத்திருப்பின்
ஆதாரத்திலிருந்தே
வெளிக்கும் தமிழீழத் திசைகள்!
தாயகமே என்
தமிழீழ மண்ணே…
உன்னை நான்
உயிராகப் பதித்தேனென
உரக்கச் சொல்லியபடி…
உயிர் தந்து
உறவாடும் மானமற
வீரர்களின் அதிர்வாக
வெளிக்கும் தமிழீழத் திசைகள்!
கோரங்கள் கண்டு
கொதித்தெழுந்து
உயிர்தந்து…..
தமிழீழத் தாய்மடியின்
சுதந்திரத் தாலாட்டில்
தலைசாய்த்து உறங்கிட
அவர்களின் பீடங்களில்
அசரீதி கேட்டிடும்..
தமிழீழத் திசைகள்
வெளிக்குமென.
-தமிழ்ப்பிரியன்-