சதொச நிறுவனத்தினால் உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

116 0

சதொச நிறுவனத்தினால் உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் இன்று (23) முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 229 ரூபாவாகும்.

கோதுமை மாவின் விலை 14 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இதன் புதிய விலை 265 ரூபாவாகும்.

வெள்ளை பூண்டு கிலோவொன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 495 ரூபாவாகும்.

பெரிய வெங்காயம் கிலோவொன்றின் விலை 43 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 255 ரூபாவாகும்.