அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலக நபர்களின் சடலங்களை உறவினர்கள் எடுத்துச் சென்றனர்!

164 0

மினுவாங்கொடை, பொல்வத்த, ஜபால இறப்பர் தோட்டம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள் இருவரின் சடலங்களை  அவர்களது உறவினர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணங்கள் தொடர்பில் மினுவாங்கொடை மாவட்ட நீதிவான் ஹேஷாந்த டி மெல்  பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கம்பஹா சட்ட வைத்திய அதிகாரிக்கு  உத்தரவிட்டிருந்தார்.

மேலும், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு கம்பஹா வைத்தியசாலைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில், கம்பஹா  சட்ட வைத்திய அதிகாரி கே.எம்.டி.பி. கடந்த 20ஆம் திகதி  இரு  சடலங்களின் மீதான  பிரேத பரிசோதனையை  மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.