அனைத்து பல்கலைகழக பிக்குமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ ஸ்ரீதம்ம தேரர் மற்றுமொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடுவல நீதவான் நீதிமன்றம் இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளது.
டிசம்பர் ஆறாம் திகதி வரை தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பொதுச்சொத்திற்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.