புல்லாங்குழல் தயாரிக்கும் கலைஞர் பொன்னுசாமிக்கு ‘பர்லாந்து’ விருது

126 0

இளம் இசைக் கலைஞர்களுக்கான மேடை அமைத்துக் கொடுப்பது, இசையை ஆவணப்படுத்துவது போன்ற பணிகளில் 10 ஆண்டு களாக ஈடுபட்டுள்ள ‘பரிவாதினி’ அமைப்பு, இசைக் கருவிகளை உருவாக்கும் கைவினைக் கலைஞர்களுக்கு ‘பர்லாந்து’ விருதை வழங்கி கவுரவித்து வருகிறது.

பாலக்காடு மணி அய்யர் உட்பட ஏராளமான மிருதங்க மேதைகளுக்கு மிருதங்கம் செய்துகொடுத்த கலைஞர் பெர்னாண்டஸ் (பர்லாந்து) பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது.

சென்னையில் நடந்த விழாவில், புல்லாங்குழல் உருவாக்கும் கலைஞர் எஸ்.எஸ்.பொன்னுசாமிக்கு இந்த ஆண்டுக்கான ‘பர்லாந்து’ விருது வழங்கப்பட்டது. பரிவாதினி அமைப்பின் நிறுவனர் லலிதா ராம் முன்னிலையில், இவ்விருதை பாடகர் பாலக்காடு ஸ்ரீராம், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் வழங்கினர்.

இசைக் கலைஞர்கள் மட்டுமின்றி, இசைக் கருவிகள் தயாரிக்கும் கைவினைஞர்களையும் அரசு ஆதரிக்க வேண்டும் என்று லலிதா ராம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.