டென்மார்க் ஓல்போ பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு

203 0

மாவீரர் வாரத்தை முன்னிட்டு 21.11.2022 அன்று  டென்மார்க் ஓல்போ பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் மிகவும் சிறப்பாக நினைவு கூறப்பட்டது. தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் வித்தாகி போன மறவர்களை நினைவு கூரும் முகமாக டென்மார்க் Aalborg பல்கலைக்கழக மாணவர்களினால் இவ்வாண்டு, முதல் முறையாக நிகழ்வேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

புலம்பெயர்ந்து டென்மார்க் தேசத்தில் விழுதுகளாய் விளங்கும் எம் அடுத்த சந்ததியினர், டென்மார்க் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், மாவீரர்களுக்கு விளக்கேற்றி விழிமூடி கந்தகமலரோடு  நினைவுகூறியுள்ளனர்.மாபெரும் சக்தியான மாணவர்களே, மறவர் துதிபாடி அவர் கனவுகளின் விழிகளுக்குள் சிறு விளக்கேற்றி ஒன்றாய் இனைந்து, மாவீரர்  கண்ட கனவுகள் கனவாகிப் போகாமல் இரு கரம் கோர்த்து பயணிக்க தயாராகியுள்ளனர்.

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு வடிவம் கொடுப்பது போல் எமது அடுத்த தலைமுறையினர், மாவீரர்களின் கனவினைச் சுமந்து செல்கின்றது பெருமையாகவும் நம்பிக்கையாகவும் உள்ளன.தாயக விடுதலைக்கு தங்கள் உயிரை வித்தாக்கிய மானவீரர்களை தொடந்து வரும் நாட்களில் வழமைபோல் கொப்பன்காகன், ஓடன்ஸ்ச மற்றும் ஓகுஸ் ஆகிய நகர பல்கலைக்கழக மாணவர்களாளும், நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற ஏற்பாடகி உள்ளது.