பரவிப்பாஞ்சான் மக்கள், தமது காணிகளை கையளிக்க கோரி இன்று முதல் தொடர் கவனஈர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் (காணொளி)

345 0

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள், தமது காணிகளை கையளிக்க கோரி இன்று முதல் தொடர் கவனஈர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பரவிப்பாஞ்சான் மக்கள் இன்று காலை முதல், பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒன்று கூடி தமது காணிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முன்னர், மக்களது காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி, காணிகளை மீள கையளிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

ஆனால் பரவிப்பாஞ்சான் காணிகளை முற்றாக விடுவிப்பதாக வாக்குறுதிகள் மட்டுமே அரசியல்  வாதிகளாலும், அரச அதிகாரிகளாலும் வழங்கப்பட்டிருந்தன. எனினும் பரவிப்பாஞ்சான் காணிகள் முற்றாக விடுவிக்கப்படவில்லை.

ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் காணிகள் முற்றாக விடுவிக்கப்படும் வரை தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.