ஓமானிற்கு ஆட்கடத்தல் – சந்தேகநபருக்கு பிணை

115 0

வேலை வாங்கி தருவதாக கூறி இலங்கையில் இருந்து பெண்களை சுற்றுலா விசாவில் அழைத்து ​சென்று ஓமானில் முன்னெடுக்கப்பட்ட ஆட்கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட​ சந்தேகநபரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஆஷா திஸாநாயக்க இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.