இந்தியாவுக்கும் சிறீலங்காவுக்குமிடையில் பயணிகள் கப்பல் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கான இறுதிக்கட்ட வேலைகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் கொச்சி துறைமுகத்துக்கும், கொழும்புக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பாகவே இருதரப்பு இணக்கப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக இந்தியாவுக்கும் சிறீலங்காவுக்குமிடையில் பேச்சுக்கள் நடைபெற்று முற்றிலும் பயணிகள் கப்பல் சேவைக்கான ஒரு நெறிமுறைகளை இறுதிப்படுத்தியுள்ளோம். இது பொருளாதார ரீதியாக சாத்தியமாகவேண்டுமாயின், பொருட்கள், சேவைகளையும் இணைத்துக்கொள்ளவேண்டுமென ஒரு இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரத்திற்கும், தலைமன்னாருக்குமிடையிலான பயணிகள் சேவை 1980ஆண்டு தொடக்கத்தில் நிறுத்தப்பட்டதையடுத்து, 2011ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையில் பயணிகள் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
எனினும் இதனால் போதியளவு வருமானம் கிடைக்காமையால் இச்சேவை இடைநிறுத்தப்பட்டது.