சிறீலங்கா காவல்துறையின் கொமாண்டோ படைப்பிரிவான, சிறப்பு அதிரடிப்படையையும், சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களத்தையும், பலப்படுத்துவதற்கான நவீன கருவிகளை ஜப்பான் கொடையாக வழங்கவுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சிறீலங்காவில் தீவிரவாத முறியடிப்பு ஆற்றலை வலுப்படுத்தும் நோக்கிலேயே ஜப்பான் இந்த நிதியுதவியை வழங்கவுள்ளது.
ஜப்பானின் பொது கொடை உதவித் திட்டத்தின் கீழ், இதற்காக 327 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.
சட்டம் ஒழுங்கும் மற்றும் போக்குவரத்து அமைச்சு என்பன இந்த உடன்பாட்டில் கைச்சாத்திடவுள்ளன.
இந்த உதவித் திட்டத்தின் கீழ் தொடர்பாடல் கருவிகளும் உள்ளடங்கியுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.