வாகநேரி நீர்பாசன திட்டத்தின் கீழ் உள்ள விவசாயக் கண்டங்களில், சட்டவிரோத மண் அகழ்வுகள் இரவு வேளைகளில் இடம்பெற்று வருவதை தடுத்து நிறுத்தாமல் பாராமுகமாக இருக்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக, மக்கள் ஒன்று சேர்ந்து பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
வாகநேரி பிரதேச விவசாயக் கண்டங்களில் இடம்பெறும் மண் அகழ்வால், பாதிக்கப்பட்ட பாலங்கள், வாய்க்கால்கள், வீதிகள், மணல் சேகரிக்கப்படும் இடங்களை நேரில் பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,பயிர்களை பாதுகாக்கும் வேலிகளே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன. வனத்துறையினருக்கு சொந்தமான காணியில் மண் சேமிக்கப்பட்டு கடத்தப்படுகின்றது. இதன் பின்னணியில் வனத்துறையும் உள்ளதா? மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம், இவ்வாறான விடயங்கள் வெளியில் வரும் என்னும் பயமாகும்.
அடுத்ததாக, இங்குள்ள அரசியல்வாதிகள் தமது அரசியல் சுயலா
பம் கருதி தமிழ், முஸ்லிம் என பாகுபாடு காட்டி, மக்களை பிரித்துவிட்டு இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமாக பிரித்து, மக்களுக்கு சொந்தமான வளங்களைச் சுறையாடுகின்றனர். இந்நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்; அல்லாதுவிடில், எமது மக்களும் எதிர்கால சந்ததியும் நிர்க்கதியாகுவது வெகு விரைவில் நடைபெறும் என்று தெரிவித்தார்.