சட்டப்பூர்வ அனுமதியின்றி தேக்கு மரப்பலகைகளை ஏற்றிவந்த லொறி சாரதி கைது

125 0

படல்கும்புர பகுதியில் இருந்து பதுளைக்கு சட்டபூர்வமான அனுமதியின்றி தேக்கு மரப்பலகைகளை ஏற்றி வந்த கனரக லொறியின் சாரதியை பசறை பொலிஸ் நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது இன்று (20) அதிகாலை சுமார்4.30 மணியளவில் பசறை மடூல்சீமை சந்தை சோதனை சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்திற்கிடமான குறித்த லொறியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் சுமார் 15 இலட்சம் பெறுமதியான தேக்கு மரப்பலகைகள் காணப்பட்டுள்ளன.

 

இவ்விடயம் தொடர்பாக லொறியின் சாரதியிடம் விசாரனை நடத்தியபோது அவற்றை பதுளைக்கு கொண்டு செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வித சட்டரீதியான முன் அனுமதியும் இன்றி தேக்கு பலகைகள் கொண்டுசெல்லப்படுவதை அறிந்த பொலிஸார் சாரதியை (35) கைது செய்து நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.