வியாழக்கிழமை இடம்பெறவிருந்த கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை இலங்கை ஒத்திவைத்துள்ளது என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு கடன்வழங்கியவர்கள் முன்வைத்துள்ள கேள்விகள் சந்தேகங்களிற்கு மத்திய வங்கியும் திறைசேரி அதிகாரிகளும் பதிலளிப்பதற்கான கால அவகாசத்தை வழங்குவதற்காக இலங்கை வியாழக்கிழமை இடம்பெறவிருந்த கடன் பேச்சுவார்த்தைகளை ஒத்திவைத்துள்ளது என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 மில்லியன்டொலர் நிதி உதவியை பெறுவதற்கான இணக்கப்பாட்டினை எட்டிய பின்னர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை இலங்கை செப்டம்பரில் ஆரம்பித்தது.
இலங்கை தசாப்தகாலத்தில் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதை நோக்கிய நடவடிக்கையாக இது காணப்பட்டது.
எனினும் இலங்கை தனக்கு பெருமளவு கடன்களை வழங்கிய இந்தியா சீனா போன்ற நாடுகளிடமிருந்து நிதி உத்தரவாதங்களை பெறவேண்டிய நிலையில் உள்ளது.
இதன் பின்னரே சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைக்கும்.
இலங்கைக்கு கடன்வழங்கிய பலர் பல்வேறு கரிசனைகளை வெளியிட்டுள்ளனர் அதற்கான தெளிவுபடுத்தல்களை கோரியுள்ளனர் ஆகவே இதற்கான தெளிவுபடுத்தல்கள் முதலில் இடம்பெறும் அதன் பின்னர் புதிய சுற்றுப்பேச்சுவார்த்தைகளிற்கான திகதி நிர்ணயிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.