துமிந்த சில்வாவுக்கு எதிரான வழக்கு – கோட்டாவை பிரதிவாதியாக பெயரிட அனுமதிக்கக் கோரிக்கை

124 0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியளித்த பொது மன்னிப்பை சவாலுக்கு உட்படுத்திய வழக்குகளில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிவாதியாக பெயரிட உயர் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை ( நவ.17) அனுமதி கோரப்பட்டுள்ளது.

துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பின் சட்டபூர்வ தன்மையை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர, அவரது தாயார் சுமனா பிரேமசந்தர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரான சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுகள் இன்று ( 17) விசாரணைக்கு வந்தது.

உயர் நீதிமன்ற நீதியர்சர்களான காமினி அமரசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் இவ்வாறு விசாரணைக்கு வந்தது.

இதன்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன், ஜெப்ரி அழகரத்தினம் மற்றும் சட்டத்தரணி எராஜ் டி சில்வா ஆகியோர் தமது மனுக்களில் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பெயரிட எதிர்பார்த்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.