தமிழ்க்கல்விக்கழகத்தின் தென்மாநிலங்களில் உள்ள தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் பேர்மனி புறுக்ஸ்சால் நகரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது இதில் தென்மநிலத்தில் உள்ள பதின்மூன்று தழிழாலயங்களில் உள்ள மாணவ மாணவிகள் பங்குபற்றினார்கள்.
யேர்மனியத் தேசியக்கொடி, தமிழீழத் தேசியக்கொடி மற்றும் தமிழ்கல்விக்கழகத்தின் கொடி ஆகியன ஏற்றப்பட்டு அகவணக்கத்திற்குப் பின் வீரவீராங்கணைகளால் வீளையாட்டுத் தீபம் ஏற்றிவைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து வீளையாட்டு வீரர்கள் மற்றும் நடுவர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டதைத் தொடர்ந்து அணிவகுப்பு ஆரம்பமானது. மிகவும் சிறப்பாக அமைந்திருந்த அணிவகுப்புத் தேசியக்கொடியைக் கடந்து செல்லும்போது தேசியக் கொடிகளுக்கு மரியாதை செலுத்திச் சென்றார்கள்.
அதனைத் தொடர்ந்து மெய்வல்லுனர் விளையாட்டுக்கள் ஆரம்பமாகின மாணவ மாணவிகள் மிகவும் உற்சாகமாக போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைக் குவித்தனர்.இறுதியாக ஒப்பனையும் பாவனையும் போட்டி நிகழ்வாக நடாத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து தமிழாலய பெற்றோர்களுக்கு கயிறிழுத்தல் போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கான வெற்றிப் பதங்கங்கள் உடனுக்குடன் அணிவித்து மதிப்பளிக்கப்பட்டது.
இறுதியாக மூன்று போட்டிகளில் பதினெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட வீர வீராங்கணைகளுக்கு சிறந்த போட்டியாளருக்கான கேடயங்கள் வளங்கி மதிப்பளிக்கப்பட்டது.
இப்போட்டிகளில்
முதலாமிடத்தை முன்சன் தமிழாலயமும்
இரண்டாமிடத்தை ஸ்ருட்காட் தமிழாலயமும்
மூன்றாமிடத்தை ருட்லிங்கன் தமிழாலயமும்
பெற்றுக்கொண்டன
இவர்களுக்கான வெற்றிக் கேடயங்களும் வளங்கி மதிப்பளிக்கப்பட்டது.