பெரும்பான்மை இனமான சிங்களவர்கள் எதுவும் தரமாட்டார்கள் என்பதனை முழுமையாக அறிந்து கொண்ட ஒரேயொருவர் தான் தலைவர் என முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன் தினம் (13.11.2022) போராளிகள் நலன்புரி சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பலதரப்பட்ட விடயங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளும் தமிழரசு கட்சிக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கிறது உண்மை.
ஆனால் ஒரு தலைவராக இருக்கின்றவர் வெளிக்காட்டினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஏனையவர்கள் உள்ளே வந்து அதனை இன்னும் பிரிவினைக்கு கொண்டு போய் விடுவார்கள்.
உண்மையை கூற முடியாமலும் இருக்கிறது. தனி ஒரு மனிதனால் சிதைக்கப்பட்டு 10 கட்சிகள் உருவாகின. அதனை கேட்க ஏன் ஏனைய கட்சிகள் தவறினார்கள்.
அதற்குரிய நடவடிக்கைகளை அங்கே எடுத்திருக்க வேண்டும். அதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் செய்தது சரி என்று கூறவில்லை. அவர் உயர் நீதிமன்றத்தில் நீதியரசராக இருந்தவர்.தனக்கு ஒருவருடன் பிரச்சினை என்பதற்காக காலம் காலமாக தமிழ் மக்களுக்கு ஒரு பிரதிநிதியாக செயற்பட்டு கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியை உடைத்து சென்றமை மகா பிழை. மக்கள் அதனை நிராகரித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.