அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் உறுப்பினர்களை நியமிக்க விண்ணப்பம் பிரசுரிக்கப்பட்டமை தவறு

109 0

அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் உறுப்பினர்களை நியமிப்பதற்கு பாராளுமன்றத்தின்  மூலம் விண்ணப்பம்  பிரசுரிக்கப்பட்டுள்ளமை தவறு. 21ஆவது திருத்தத்தில் அவ்வாறு குறிப்பிடப்பிடப்படவில்லை. இதனை சபாநாயகர் தெளிவுப்படுத்த வேண்டும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம்  நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் உறுப்பினர்களை சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஒன்றிணைந்து தெரிவு செய்து நியமிக்க வேண்டும். ஆனால் அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் உறுப்பினர்களை நியமிப்பதற்கு பாராளுமன்றத்தின் மூலம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது இந்த முறை தவறானது.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. எனவே இதனை திருத்தி சிவில் உறுப்பினர் நியமனம் தொடர்பில் சபாநாயகர் சபைக்கு அறிவிக்க வேண்டும். அத்துடன் அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள், சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர் நியமனம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றார்.