கம்பஹாவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயம் !

149 0

கம்பஹா மகேவிட்ட  பாடசாலை ஒன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று (15) பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.