எரிவாயு கசிவினால் மீனவர் படுகாயம் !

104 0

எரிவாயு கசிவு காரணமாக மீனவர் ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆழ்கடலுக்கு இயந்திரப் படகில் மீன்பிடிக்க சென்ற ஓட்டமாவடி – மீராவோடை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரே இவ்வாறு எரிகாயங்களுடன் இன்று (15) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயந்திரப் படகிலிருந்த எரிவாயு சிலிண்டரில் உணவு சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு கசிவு ஏற்பட்டு மீனவர் மீது தீப்பற்றியதாக அவருடன் சென்ற மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஏனைய மீனவர்கள் தீப்பற்றிய மீனவரை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.