வடக்கில் காணிகளைப் படையினருக்குத் தாரைவார்க்க இடமளியோம்

83 0

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் அவரின் செயலகத்தில் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்குடன் அந்தக் காணிகளைப் படையினருக்கு வழங்கும் திட்டத்துடன் நாளை செவ்வாய்க்கிழமை கூட்டம் நடைபெறுமாக இருந்தால் அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிககியில், வடக்கு மாகாணத்தில் அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கும்படியே நாங்கள் கோரி வருகின்றோம்.

நல்லாட்சியில் எமது கோரிக்கையின் பிரகாரம் வடக்கில் ஏராளமான காணிகள் விடுவிக்கப்பட்டன. அதேபோல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த ஆட்சியிலும் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றே கோருகின்றோம்.

வடக்கில் ஆளுநர் காணிகளைச் சுவீகரித்துப் படையினருக்குத் தாரைவார்க்க நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.