பேச்சுக்கு முன்னர் உத்தரவாதம் தேவை: ரணிலைக் கோரும் சம்பந்தன், விக்கி, கஜேந்திரகுமார்

127 0

* மீண்டும் ஏமாற்றமடைய முடியாது: சம்பந்தன்

* ஏக்கிய அடிப்படையில் பேசமுடியாது: விக்கி

* பிணையெடுப்பதற்கு உதவமுடியாது: கஜன்

வடக்குமக்கள் எதிர்கொண்டுள்ள தேசிய இனப்பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளமையை வரவேற்றுள்ள பிரதான தமிழ் அரசியல் கூட்டுக்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்டு பேச்சுக்களை முன்னெடுக்க முடியாத நிலையில் அதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த ஒருவருடத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்தவாரம் முதல் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளதாக கடந்த வியாழக்கிழமையன்று பாராளுமன்றத்தில் வைத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார்.

இரா.சம்பந்தன்

தமிழ்மக்களிடம் சம்பந்தன் விடுத்துள்ள கோரிக்கை!

குறித்த அறிவிப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வீரகேசரியிடம் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான நியாயமான தீர்வினை வழங்குதை மையப்படுத்திய பேச்சுக்களை எந்தத் தரப்பினருடனும் முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளோம்.

எனினும், எம்முடன் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று பலதடவைகள் கூறப்பட்டாலும் அவை இதய சுத்தியுடன் இடம்பெற்றாதாக இல்லை. ஆகவே வெறுமனே பேச்சுவார்த்தையென்ற விடயம் உதட்டளவில் இல்லாது, நடைமுறையில் செயல்வடிவம் பெறுவதாக அமைய வேண்டும்.

அதேநேரம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளார்.  இதுவரையில் அதற்கான உத்தியோக பூர்வமான அழைப்புக்கள் எவையும் விடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் அவர் எடுத்துவருகின்ற முயற்சிகளையும் அறிவிப்புக்களையும் வரவேற்கின்றோம். ஆனால் அது உடனடியாக செயல்வடிவம் பெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில், புதிய அரசியலமைப்பொன்றின் ஊடாகவே தேசிய இனப் பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வினைக் காண முடியும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். அதற்காக 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் பாராளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டு வழிநடத்தல்குழு ஸ்தாபிக்கப்பட்டு ஒரு இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டது.

எனினும் அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டு விட்டது. குறித்த செயற்பாட்டில் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தபோதும் இறுதியில்

ஏமாற்றுப்பட்டோம். மீண்டும் அவ்வாறான நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு தயாரில்லை. ஆகவேரூபவ் உதட்டளவில் விடுக்கப்பட்ட அறிவிப்புக்களுக்கு செயல்வடிவம் அளிப்பதற்கான நடவடிக்கைகள் தாதமின்றி முன்னெடுக்கப்படும் என்ற உத்தரவாதம்

அளிக்கப்பட்டு அவை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

சி.வி.விக்னேஸ்வரன்

C.V. Wigneswaran, Author at Colombo Telegraph

இதேவேளைரூபவ் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும்ரூபவ் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கரூபவ் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் அம்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பேச்சுக்களை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளார்.அவ்விதமாக விடுக்கப்பட்ட அறிவிப்பை நாம் வரவேற்கின்றோம். ஆனால் இதுவரையில் உத்தியோக பூர்வமான அழைப்பு கிடைக்கவில்லை. எனினும், அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒருவருடத்திற்குள் தீர்ப்பதற்கு முயற்சிகளை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான நிலையில் முக்கியமானதொரு விடயத்தினை கருத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

இலங்கையில் மாறிமாறி வந்த ஆட்சியாளர்களுடன் தமிழ்த் தலைவர்கள் பலரும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள். அவ்வாறு பேச்சுக்களை நடத்தி களைத்துவிட்டார்கள். நாமும் அவ்வாறு பேச்சுக்களை நடத்தி களைத்துவிட்டோம். எதுவுமே நடைபெறவில்லை. ஆகவே, பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாக இருந்தால் ஒற்றையாட்சி முறைமையிலிருந்து அரசியலமைப்பை விடுவிக்கச் செய்வதற்கு தென்னிலங்கை தலைவர்கள் முன்வரவேண்டும்.

ஒற்றையாட்சி அடிப்படையில் தான் அரசியலமைப்பு இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்து தென்னிலங்கைத் தலைவர்களும் சிங்கள மக்களும் வெளியில் வந்தால் தான் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தமான தீர்வினைக் காணமுடியும். ஆகவே, ‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பது ‘எக்சத் ராஜ்ஜிய’ ஆக மாறவேண்டும்.

ஏனெனில் ஏக்கிய’ என்ற நிலைமை நீடித்தால் அது தனியே பெரும்பான்மை மக்களை மையப்படுத்தியதாகவும் அவர்களுக்கே அதிகாரங்களும் உரித்துக்களும் உரியதாகவும் காணப்படுகின்றது. எனவே தான் ‘எக்சத்’ என்று மாற்றம் அடைகின்றபோது அனைவருக்கு சமத்துவமான நிலைமையும் அந்ததந்தப்பகுதிகளை அவர்களே ஆளும் நிலைமைகளும் உருவாகும்.

ஆகவே, இதனடிப்படையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பைக்கு வெளியில் வந்து பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தயாராகினாலேயே பேச்சுவார்த்தைகளினால் பலன்கள் கிட்டும். அதேநேரம், ஒற்றையாட்சியிலிருந்து சமஷ்டி முறைமைக்கு

அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும். அவ்வாறு மாற்றப்படும் சமஷ்டி எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி தாராளமாக பரந்துபட்டுப் பேச்சுக்களை நடத்தலாம்.

அதனை விடுத்து பேச்சுவார்த்தை மேசையில் ஒவ்வொரு விடயங்களையும் நீண்டநேரம் விவாதித்துக்கொண்டிருப்பதில் பயனில்லை. எனவே, ஒற்றையாட்சி நீக்கம் பற்றி உத்தரவாம் முதலில் தேவையாக உள்ளது என்றார்.

கஜேந்திரகுமார்

தேசியத் தலைவர் பிரபாகரன் அவ்களிற்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் - வெளியான செய்திக்கு மறுப்பு | Jaffna Breaking News 24x7

அதேநேரம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,

எம்மைப் பொறுத்தவரையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ்த் தரப்புக்களுடன் பேச்சுக்களை நடத்தவேண்டிய கட்டாயமான சூழலொன்று ஏற்பட்டுள்ளது.

அவர் அரசியல் ஸ்திரத்தன்மையை சர்வதேசத்திற்கு காண்பிக்க வேண்டுமாக இருந்தால் சகல தரப்புக்களுடனும் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டியது தவிர்க்க முடியாத விடயமாகின்றது. அவ்வாறு அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் தான் சர்வதேச

நாணயநிதியத்தின் கடன் உதவிகள் உட்பட இதர நாடுகளின் நன்கொடைகளும் கடன் மறுசீரமைப்புக்களும் கூட சாத்தியமாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில், தான் அவர் தமிழ்த் தரப்புக்களுடன் பேச்சுக்களை

முன்னெடுப்பதற்கு முன்வந்துள்ளார். எம்மைப்பொறுத்தவரையில், இதுதான் எமக்குள்ள மிகப்பெரும் ‘பிடி’ஆகும். ஆகவே அதனை எமது மக்களின் அபிலாஷைகளை முழுமையாக வென்றெடுப்பதை மையப்படுத்தியே பயன்படுத்த வேண்டியது கட்டாயமாகின்றது.

அந்தவகையில், பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக ஒற்றையாட்சி முறைமையின் கீழாக பேச்சுக்களை முன்னெடுக்க முடியாது என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டு அதனைக் கைவிடுவதற்கான உத்தரவாதத்தினை வழங்கவேண்டும். அவ்வாறான எந்த உத்தரவாதமுமின்றி பேச்சுவார்த்தை மேசைக்குச் சென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சர்வதேசத்திடம் பிணை எடுத்துவிட வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் எமக்கு இல்லை. இதேநேரம், இந்தவிவகாரம் சம்பந்தமாக எமது மத்தியகுழுவானது நாளை திங்கட்கிழமை

கூடவுள்ளது. அதன்போது உத்தியோகபூர்வமான தீர்மானம் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றார்.