மது அருந்த வேண்டாம் – மஹிந்தவுக்கு ஆலோசனை

462 0

rajapaksa_350_0515130634373மரு அருந்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிடம் அவரது குடும்ப மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவின் உடல்நலம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் வைத்தியர் இவ்வாறான ஆலோசனை வழங்கியுள்ளதாக மஹிந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மஹிந்த குறைந்தது 3 மாதங்களுக்காவது மது அருந்துவதை முற்றாக நிறுத்த வேண்டும் எனவும் வைத்தியர் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.