துரை ரட்ணசிங்கத்தின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார் பிரதமர்

107 0

காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் துரை ரட்ணசிங்கம் அரசியலில் குறுகிய காலம் செல்வாக்கு செலுத்தியிருந்தாலும், கல்விதுறையில் பாரிய சேவையாற்றியுள்ளமை மதிக்கத்தக்கது.

அவரது இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (11) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அனுதாப பிரேரணையின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் மக்கள் ஜனநாயக போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். மக்களின் அடிப்படை உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலையில் இருந்துக்கொண்டு மக்களுக்காக செயற்பட்டார்.

உயிரிழப்பதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் என்னை சந்தித்தார். அப்போது கூட அவர் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பது குறித்து எம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார்.மக்களுக்கான செயற்பாட்டு அரசியலில் ஈடுப்பட்ட அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.பி ஏக்கநாயக்க நாட்டு மக்களுக்காகவே அரசியலில் ஈடுப்பட்டார்.

பௌத்த மதத்தை பாதுகாப்பதற்காக துறைசார் நிறுவனங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்ப்பட்டார்.கலை கலாசாரத்திற்கு முன்னுரிமை வழங்கி அரசியலில் ஈடுப்பட்டார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த போது எமது அடுத்தக்கட்ட அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது அவர் எம்முடன் ஒன்றிணைந்து செயற்பட்டார்.நாட்டுக்காக அவர் ஆற்றிய சேவைகளை நினைவுப்படுத்திக் கொள்கிறோம்.

காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார விஜய குணவர்தனவும்,நானும் ஒன்றாக பாராளுமன்றத்திற்கு தெரிவானோம்.இவர் கிராம புற மக்களின் முன்னேற்றத்திற்காக செயற்பட்டார்.அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது,அதற்கு எதிர்பு தெரிவித்து எம்முடன் ஒன்றிணைந்துக் கொண்டார். தாய் நாட்டுக்காக அவரது கொள்கை மதிக்கத்தக்கது.

காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் துரை ரட்;ணசிங்கம் அரசியலில் குறுகிய காலம் செல்வாக்கு செலுத்தியிருந்தாலும், கல்விதுறையில் பாரிய சேவையாற்றியுள்ளமை மதிக்கத்தக்கது. அவரது இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.