நுரைச்சோலை லக் விஜய அனல் மின்நிலையத்திற்காக 2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வது தொடர்பில் கணக்காளர் நாயகம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை செயற்படுத்துமாறு கோப் குழு பணிப்புரை விடுத்துள்ளது.
பெறுகை அடிப்படையில் நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்ட போதும்,இடம்பெற்றுள்ள ஒரு சில குறைபாடுகள் குறித்து கோப் குழு அவதானம் செலுத்தியுள்ளது.
நிலக்கரி கொள்வனவு தொடர்பான கணக்காளர் நாயகம் சமர்ப்பித்துள்ள அறிக்கையை பாராளுமன்றத்திற்கும் கோப் குழுவின் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தார்கள்.
கணக்காளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையை சட்டபூர்வமாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல் மின்நிலையத்திற்கு 2022 -2025 ஆண்டு வரையான காலப்பகுதிக்கு தேவையான நிலக்கரியை பெற்றுக் கொள்வது தொடர்பான பெறுகையை செயற்படுத்துவது தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி முன்வைக்கப்பட்ட விசேட கணக்காளர் அறிக்கை கோப் குழுவில் மீளாய்வு செய்யப்பட்டது. நிலக்கரி கொள்வனவிற்காக கணக்காளர் நாயகம் 08 பிரதான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
நிலக்கரி விலைமனு கோரலின் போது அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்ட விலைமனுகோரல் வழிமுறைக்கு அமைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். முறையான வழிமுறைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நிலக்கரி கொள்வனவிற்கான விலைமனுகோரல் நடவடிக்கைகள் வெளிப்படை தன்மையுடன் இடம்பெற வேண்டும்.2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்22ஆம திகதி அமைச்சரவையின் அனுமதிக்கமைய திறந்த சர்வதேச விலைமனு கோரலை நடைமுறைப்பத்தல் வேண்டும் என கோப் குழு மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.