திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலிக்குச் சொந்தமான நான்கு தனியார் வங்கிக் கணக்குகள் தொடர்பான விரிவான அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் திலினி கமகே தனியார் வங்கிகளின் முகாமையாளர்களுக்கு வியாழக்கிழமை (10) உத்தரவிட்டார்.
மொரட்டுவையில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரிடமிருந்து நான்கு கோடி ரூபா பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்வைத்த கோரிக்கையை கவனத்தில் கொண்டே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சந்தேக நபரான திலினி பிரியமாலி, முறைப்பாட்டாளரான வர்த்தகருக்கு டொலர்களை தருவதாகக் கூறி குறித்த தொகையை பெற்றுக் கொண்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிக்கை செய்திருந்தனர்.