யேர்மனியில் கே.எவ்.சி மன்னிப்புப் கோரியது

139 0

யேர்மனியில் உள்ள தனது வாடிக்கையாளருக்கு விளம்பர செய்தியை அனுப்பியத்திற்கு மன்னிப்பு கோரியது கே.எவ்.சி நிறுவனம்.

யேர்மனியில் 1938 இல் நாட்டில் நாஜி தலைமையிலான தொடர் தாக்குதல்கள் 90 க்கும் மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டனர். மேலும் யூதர்களுக்குச் சொந்தமான வணிகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை அழித்தன. இதுவே யூதப்படுகொலையின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நாளில் கிறிஸ்டல்நாக்ட் (Kristallnacht) ஐ சீஸி சிக்கனுடன் நினைவுகூருமாறு வலியுறுத்தி செயலி ஊடாக வாடிக்கையாளருக்கு விளம்பரச் செய்தியை அனுப்பியது கே.எவ்.சி. அதாவது கிறிஸ்டல்நாச்சின் நினைவு நாளில் உங்கள் மிருதுவான கோழியில் அதிக மென்மையான சீஸ் கொண்டு சாப்பிடுங்கள் எனச் செய்தி அனுப்பட்டது.

இச்செய்தி அனுப்பட்ட ஒரு மணி நேரத்தில் மன்னிப்புடன் மற்றோரு செ்யதி அனுப்பட்பட்டது. அதில் மிகவும் வருந்துகிறோம், இது மீண்டும் நிகழாமல் இருக்க எங்கள் உள் செயல்முறைகளை உடனடியாகச் சரிபார்ப்போம். தயவுசெய்து இந்தப் பிழையை மன்னியுங்கள்” என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

யேர்மனியில் கிறிஸ்டல்நாக்ட் (உடைந்த கண்ணாடியின் இரவு) நவம்பர் 9 ஆம் திகதி நினைவு கூரப்படுகிறது. ஆறு மில்லியனுக்கும் அதிகமான யூத மக்களை நாஜிக்கள் கொன்றதை பிரதிபலிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு பல நினைவு நிகழ்வுகள் மற்றும் விவாதங்கள் நடைபெறுவரு வழமை.