பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்தை எப்போது மேற்கொள்ளவது

105 0

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதாக இந்த அரசாங்கம் ஆரம்பித்தில் இருந்து தெரிவித்து வருகின்றது. ஆனால் இதுவரை அதனை செய்யவில்லை.

அதனால் இந்த திருத்தங்களை எப்போது கொண்டுவருவது என்பதை அரசாங்கம் தெரிவிக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்போவதாக ஜனாதிபதி சபையில் தெரிவித்தார். ஆனால் கோத்தாபய ராஜபக்ஷ்வும் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதாக தெரிவித்திருந்தார். அப்படியானால் எப்போது இந்த திருத்தத்தை கொண்டுவரப்போகின்றது என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

ஏனெனில் பயங்கரவாத தடைச்சட்டத்தை  அரசாங்கம் தவறான முறையில் பயன்படுத்தி வருகின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால் ஜீ.எஸ்.பி சலுகையை நிறுத்துவதாக ஐராேப்பிய ஒன்றியம் எச்சிரிக்கை விடுத்திருக்கின்றது.

மேலும் கடந்த காலங்களில் சில அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு வேண்டப்பட்ட பலர், அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளில் இருந்து முற்றாக விடுக்கப்பட்டிருந்தன.

அதன் பிரகாரம் இவ்வாறு கடந்த 3வருடத்துக்குள் சட்டமா அதிபர் திணைக்களம் எத்தனை வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொண்டள்ளது என்பது தொடர்பில் தகவல் அறியும் உரிமையின் கீழ் கேட்டிருந்து பல மாதங்கள் கடந்தும் இன்னும் அதற்கு பதில் இல்லாமல் இருக்கின்றது. சட்டத்தை பாதுகாக்கவேண்டிய சட்டமா அதிபர் திணைக்களமே சட்டத்தை மதிக்காமல் செயற்படுகின்றது.

அத்துடன் உயிர்த் ஞாயிறு தாக்குதல் சம்பத்தில் பிரதான சாட்சியாளராக இருக்கும் சாரா ஜெஸ்மின் உயிருடன் இருக்கின்றார் என்பது தற்போது மீண்டும் உறுதியாகி இருக்கின்றது.

ஏனெனில் குண்டு வெடிப்பில் கொள்ளப்பட்டவர்களின் (டீ.என்.ஏ.) மரபனு பரிசோதனையின் போது, சாராவின் மரபனுவுடன் ஒத்துப்போவதி்லலை என இறுதியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதியாகி இருக்கின்றது.

அப்படியானால் சாரா உயிருடன் இருக்கின்றார். ஆனால் சாராவை தேடுவதை விட அவர் மரணித்துள்ளார் என தெரிவிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது.

மேலும் அரசியலமைப்பின் 21ஆம் திருத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்க முடியாது.

இதுதொடர்பாக தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு சபாநாயகருக்கும் இருக்கின்றது. அதனால் இதுதொடர்பாக தேடிப்பார்க்க பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.