ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அரசியல் வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்து இந்த மாதம் 26ஆம் திகதியுடன் பத்தாயிரம் நாட்கள் நிறைவடைகிறது.
இதனை முன்னிட்டு பாரியளவிலான கொண்டாட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த வேலைத்திட்டங்கள் சமயம், சுற்றாடல், சுகாதாரம் உள்ளிட்ட சமூகசேவைகளையும் உள்ளடக்கியதாகவும், நாடு பூராகவும் பல கொண்டாட்ட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கொண்டாட்ட நிகழ்வுகளுக்காக 100 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தரப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எனினும் குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் அனுமதி கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 16ஆம் திகதி இங்கிலாந்துக்கான விஜயத்தை மேற்கொண்டு சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் இது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், எனினும் ஜனாதிபதி நாடு திரும்புவதற்குள் அனைத்து திட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் காரியாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.