விவசாயிகளின் தேவை கருதி சிறீதரன் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம்

131 0

யாழ்ப்பாண மாவட்டத்தின் 13 கமநல சேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மேட்டுநிலப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் தேவை கருதி, உரிய காலப்பகுதியில் அவர்களுக்கான மண்ணெண்ணையையும், பசளைகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.கடந்த 23ஆம் திகதி, 29ஆம் திகதி, 30 ஆம் திகதிகளில், மயிலிட்டி, வடமராட்சி, அத்தாய் மற்றும் தீவகப் பகுதி விவசாயிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனித்தனியே சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்த கலந்துரையாடல்களின் போது மேட்டுநிலப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளால் அவருக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை மேற்கோள் காட்டியே குறித்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.