இலங்கையின் ஆட்சியாளர்கள் சர்வதேச நியமங்களிற்கு ஏற்ப செயற்படுவதை மனித உரிமை பேரவை உறுதி செய்யவேண்டும்

164 0

இலங்கையின் ஆட்சியாளார்கள் சர்வதேச நியமங்களிற்கு ஏற்ப செயற்படுவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உறுதி செய்யவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசாங்கம் சகிக்க முடியாத ஒடுக்குமுறையில் ஈடுபடுகின்றது என தெரிவித்துள்ள அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பான ஆதாரங்களை மறைப்பதற்கான முயற்சிகள் குறித்து ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை நிலவரத்தை கவனத்தில் எடுக்கும் சர்வதேச நியமங்களின் அடிப்படையில் இலங்கை செயற்படுவதை உறுதி செய்யும் எனவும் அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு ஜனநாயகம் நீதி தொடர்பான உண்மையான அர்த்தத்தை வழங்க முற்படுபவர்களிற்கு  எங்கள் நாட்டின் தலைவர்கள் என்ன செய்கின்றார்கள் – அவர்களை துன்புறுத்தியாவது, என்பதை  கருத்தில் கொள்ளும்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இதனை கருத்தில் கொள்ளும் என அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

நாட்டில் ஜனநாயகமும் உண்மையான அர்த்தத்தில் காணப்படுவதை உறுதி செய்வதற்காக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்கள்  நடைமுறைகளை  இலங்கை பின்பற்றுவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உறுதி செய்யும் எனவும் அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ்  கைதுசெய்யப்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டவர்களை  விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர்திணைக்களம் எவ்வித அக்கறையுமின்றி பரிந்துரைப்பது குறித்து ஆச்சரியமடைகின்றோம்  இதன் காரணமாக இது மக்களை தவறாக வழிநடத்துவதற்கான முழுமையான நாடகம் போல தோன்றுகின்றது என கர்தினால் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் நாட்டை ஆளும் அரசியல் சக்திகள் முன்வைத்துள்ள நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவது ஆச்சரியமளிக்கின்றது இந்த பக்கச்சார்பை நாங்கள் கண்டிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள கருத்து சுதந்திரம்  அமைதியான வழியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் போன்றவற்றை  அரசாங்கம் தொடர்ந்தும் பிடிவாதத்துடன் ஒடுக்குகின்றது பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படும் நியாயப்படுத்த முடியாத முறைகளை நாங்கள் கண்டிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ள கர்தினால் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் அனைத்து பல்கலைகழக பிக்குமார் சம்மேளன ஏற்பாட்டாளர்  ஆகியோர் கைதுசெய்யப்பட்டதையும் கண்டிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.