கிளிநொச்சி – முட்கொம்பன் பகுதியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பை கட்டுப்படுத்துக

84 0

கிளிநொச்சி முட்கொம்பன் பகுதியில் அதிகரித்து காணப்படும் போதைப் பொருள் பாவனைகளை கட்டுப்படுத்துமாறு கோரி கிராமிய மது போதைப் பொருள் தடுப்பு குழுவினால்  வடமாகாண ஆளுநர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்டோருக்கு மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பூநகரி  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் சட்டவிரோதக் கசிப்பு மற்றும் போதைப்பொருள் பாவனை என்பன அண்மைய  நாட்களாக அதிகரித்துச் செல்கின்றது.

அத்துடன், குறித்த பிரதேசத்தில் இளவயது திருமணங்கள், குடும்ப வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், தற்கொலைகள் மற்றும் வழிப்பறிக் கொள்ளைகள் என பல்வேறு குற்றச் செயல்கள்  நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக தமது கிராமத்தில் வேறு பிரதேசங்களை சேர்ந்த நபர்கள் தமது கிராமத்துக்குள் வருகை தந்து மது அருந்திவிட்டு வீதிகளிலும் பொது இடங்களிலும் மது போதையில் விழுந்து கிடப்பதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதுடன் பல குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டி உள்ளதுடன் இதனை கட்டுப்படுத்துமாறு கோரி மேற்படி மகஜர்களை கையளித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோதமாக மற்றும் போதைப் பொருளை தடுக்கும் விதத்திலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் கிராமமட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள கிராமிய மது போதை பொருள் தடுப்பு குழுவினால் வடமாகாண ஆளுநர் கிளிநொச்சி மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாவட்ட அரச அதிபர் பிரதேச  செயலாளர் உள்ளிட்டோருக்கு மகஜகர்களை அனுப்பி வைத்துள்ளனர்.