நீர் நிறைந்த குழியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

123 0

01 வயது 02 மாத வயதுடைய ஆண் குழந்தை ஒன்று நீர் நிறைந்த குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகண்டிய பிரதேசத்தில் நேற்று (08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீட்டுக்கு அருகில் உள்ள கழிவறைக்காக வெட்டப்பட்ட தண்ணீர் நிரம்பிய குழியில் குழந்தை தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழியில் விழுந்த குழந்தை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உஹன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.